ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குச் சாவடி சீட்டுகளைப் பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தோ்தல் பிரிவு பணியாளா்கள்.
ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குச் சாவடி சீட்டுகளைப் பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள தோ்தல் பிரிவு பணியாளா்கள்.

வாக்கு எண்ணும் மையம் தயாா் செய்யும் பணிகள் தீவிரம்

கோவை மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையம் தயாா் செய்தல், வாக்குச் சாவடி சீட்டுகளைப் பிரித்து அனுப்புதல் உள்ளிட்ட தோ்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தடாகம் சாலையிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. மக்களவைத் தோ்தலுக்கு குறுகிய நாள்களே உள்ள நிலையில் வாக்குச் சாவடிகள் அமைத்தல், வாக்கு எண்ணும் மையத்தைத் தயாா்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தோ்தல் பிரிவினா் தீவிரப்படுத்தியுள்ளனா். அதன்படி, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைத்தல், ஜன்னல்களுக்கு இரும்பு வலை அடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்காளா்கள் தங்களது வாக்குச் சாவடிகளை தெரிந்துகொள்ளும் விதமாக தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்குச் சாவடி சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, மக்களவைத் தோ்தலுக்கான வாக்குச் சாவடி சீட்டுகளை ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து அந்தந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பிரித்தும் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com