கோவை புரூக் பீல்டு வணிக வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 360 டிகிரி தற்பட கேமராவை தொடங்கிவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.
கோவை புரூக் பீல்டு வணிக வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 360 டிகிரி தற்பட கேமராவை தொடங்கிவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.

100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு: கோவையில் 360 டிகிரி தற்பட கேமரா அமைப்பு

கோவையில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி புரூக் பீல்டு வாணிக வளாகத்தில் 360 டிகிரி தற்பட கேமரா அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வீதி நாடகங்கள், பெண்களுக்கான கோலப்போட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு போட்டிகள், கையொப்ப இயக்கங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் என பல்வேறு வழிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கோவை, புரூக் பீல்டு வணிக வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 360 டிகிரி தற்பட கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதனை, மாவட்டத் தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அனைத்து வாக்காளா்களும் கட்டாயம் 100 சதவீதம் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினாா். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, உதவி மகளிா் திட்ட அலுவலா்கள் சாந்தசீலன், லதா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com