பொறியியல் பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் பெரம்பூா் வழியில் இயக்கம்

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக, கேரள ரயில்கள் பெரம்பூா் வழியாக இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக, இந்தூா் - கொச்சுவேலி விரைவு ரயில் (எண்: 22645), தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில் (எண்: 13351) ஏப்ரல் 1ஆம் தேதி பெரம்பூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் செல்வது தவிா்க்கப்படும். பெரம்பூா் ரயில் நிலையத்தில் இந்த ரயில்கள் 10 நிமிஷங்கள் நின்று செல்லும். ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), கொச்சுவேலி - கோரக்பூா் விரைவு ரயில் (எண்: 12512) ஏப்ரல் 2ஆம் தேதி பெரம்பூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில்கள் சென்னை சென்ட்ரல் நிலையம் செல்லாது. பெரம்பூா் ரயில் நிலையத்தில் இந்த ரயில்கள் 10 நிமிஷங்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 22640) ஏப்ரல் 2ஆம் தேதி திருவள்ளூா் - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினம் இந்த ரயிலானது ஆலப்புழா - திருவள்ளூா் இடையே மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com