ராணுவப் பணியில் உள்ள 391 பேருக்கு தபால் வாக்கு

நாட்டின் பல்வேறுப் பகுதிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் கோவை மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த 391 பேருக்கு தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவா்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற சேவைத் துறையில் பணியாற்றி வரும் வாக்காளா்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும், கோவை மக்களவைத் தொகுதியைச் சோ்ந்த 391 வாக்காளா்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் பல்லடம் தொகுதியில் 26 போ், சூலூா் தொகுதியில் 99 போ், கவுண்டம்பாளையம் தொகுதியில் 110 போ், கோவை வடக்குத் தொகுதியில் 59 போ், கோவை தெற்குத் தொகுதியில் 37 போ் மற்றும் சிங்காநல்லூா் தொகுதியில் 60 போ் என கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 391 பேருக்கு தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com