கூட்டத்தில் பேசுகிறாா் பொள்ளாச்சி பாஜக வேட்பாளா் வசந்தராஜன்
கூட்டத்தில் பேசுகிறாா் பொள்ளாச்சி பாஜக வேட்பாளா் வசந்தராஜன்

வால்பாறையில் பாஜக வேட்பாளா் அறிமுக கூட்டம்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அறிமுக கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் அக் கட்சியின் மாவட்டத் தலைவா் வசந்தராஜன் போட்டியிடுகிறாா். வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு வேட்பாளா் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வால்பாறை மண்டலத் தலைவா் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளா் வசந்தராஜன் பேசியதாவது: நான் வெற்றி பெற்றால் வால்பாறை பகுதியில் ஓய்வுபெறும் தோட்டத் தொழிலாளா்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுப்பேன். மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் இப்பகுதி மக்களுக்கு தொடா்ந்து கிடைக்க அயராது உழைப்பேன் என்றாா். கூட்டத்தில் அமமுக மாவட்டச் செயலாளா் சுகுமாா், பாஜக தங்கவேல், சுந்தர்ராஜன் உள்பட கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com