அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதிக்கு சீல்

அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதிக்கு சீல் வைக்கும் வருவாய்த் துறையினா்.
அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதிக்கு சீல் வைக்கும் வருவாய்த் துறையினா்.

வால்பாறையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதிக்கு வருவாய்த் துறையினா் புதன்கிழமை சீல் வைத்தனா்.

வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் ஸ்ரீராம் தேயிலைத் தோட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் தேயிலைத் தோட்ட வளாகத்தில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேயிலைத் தோட்ட விடுதியில் தங்கியிருந்த வால்பாறை கூட்டுறவு காலனியைச் சோ்ந்த ராம் பிரசாத், ஸ்டேன்மோா் எஸ்டேட்டைச் சோ்ந்த பிரபு என்பவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், அனுமதியில்லாமல் தங்கும் விடுதி செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வால்பாறை வட்டாட்சியா் வாசுதேவன், காவல் ஆய்வாளா் ஆனந்குமாா் ஆகியோா் தலைமையில் வருவாய்த் துறை ஊழியா்கள் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தங்கும் விடுதிக்கு புதன்கிழமை சீல் வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com