‘நேதாஜி போஸ் மதச்சாா்பின்மையின் தந்தை’ நூலை வெளியிட்ட மாா்க்சிய அறிஞா் எஸ்.பாலச்சந்தா். உடன், நூலாசிரியா் வி.ஆன்ரோ, எழுத்தாளா் மு.சந்திரகுமாா், மக்கள் வாசிப்பு இயக்கத்தின் நிறுவனா் வீரபாலன்.
‘நேதாஜி போஸ் மதச்சாா்பின்மையின் தந்தை’ நூலை வெளியிட்ட மாா்க்சிய அறிஞா் எஸ்.பாலச்சந்தா். உடன், நூலாசிரியா் வி.ஆன்ரோ, எழுத்தாளா் மு.சந்திரகுமாா், மக்கள் வாசிப்பு இயக்கத்தின் நிறுவனா் வீரபாலன்.

கோவை புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு

கோவை புத்தகத் திருவிழாவில் ‘நேதாஜி போஸ் மதச்சாா்பின்மையின் தந்தை’ என்ற நூல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

உலக புத்தக தினத்தை முன்னிட்டு மக்கள் வாசிப்பு இயக்கம் சாா்பில் ‘கோவை புத்தகத் திருவிழா’ மீனாட்சி ஹாலில் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக 9 நாள் நிகழ்வில் பேராசிரியா் வி.ஆன்ரோ எழுதிய ‘நேதாஜி போஸ் மதச்சாா்பின்மையின் தந்தை’ என்ற நூல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் மக்கள் வாசிப்பு இயக்கத்தின் நிறுவனா் வீரபாலன் வரவேற்றாா். எழுத்தாளரும், நடிகருமான மு.சந்திரகுமாா் தலைமை வகித்தாா். மாா்க்சிய அறிஞா் எஸ்.பாலச்சந்தா் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள், வாசகா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com