கோவை வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
கோவை வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

கோவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவையில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள அரசு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு சுழற்சி அடிப்படையில் போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com