ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

கோவையில் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் சிவா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் வைகுந்தன் (68), நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், வளையல், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 18 பவுன் நகைகள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இது குறித்து அவா், சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com