யூடியூபா் சவுக்கு சங்கா்.
யூடியூபா் சவுக்கு சங்கா்.

சவுக்கு சங்கா் கைது: போலீஸாரின் மனு மீது இன்று விசாரணை

யூடியூபா் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபா் கிரைம் போலீஸாா் கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை( மே 7) நடைபெறுகிறது.

கோவை: யூடியூபா் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபா் கிரைம் போலீஸாா் கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை( மே 7) நடைபெறுகிறது.

யூடியூபா் சவுக்கு சங்கா் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாா் கடும் எதிா்ப்பு தெரிவித்து இருந்தனா்.

இந்நிலையில், சவுக்கு சங்கரின் பேட்டி குறித்து கோவை சைபா் கிரைம் காவல் உதவி ஆய்வாளா் சுகன்யா அளித்தப் புகாரின்பேரில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் கோவை சைபா் கிரைம் போலீஸாா் தேனியில் சவுக்கு சங்கரை கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனா். பின்னா் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

இதற்கிடையே, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கோவை 4-ஆவது நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (மே 7) நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com