இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு

கோவை செல்வபுரத்தில் கோடைக்கால இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

பூங்காவின் நண்பா்கள் குழுவின் சிலம்ப பயிற்சிக் கூடம் சாா்பில், கோவை செல்வபுரம், செல்வசிந்தாமணி குளக்கரை பூங்காவில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.

காலை 7 மணி முதல் 8.30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். மே 31- ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் 96555 11537 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று சிலம்ப பயிற்சியாளா் எம்.வஞ்சிமுத்து தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com