அதிக மதிப்பெண் பெற்ற மாணவியைப் பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவியைப் பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.

பிளஸ் 2 தோ்வு: ஜிஎஸ்ஆா் பள்ளி 100% தோ்ச்சி

கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜிஎஸ்ஆா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இந்தப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு எழுதிய அனைத்து மாணவ-மாணவிகளும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா். பள்ளி மாணவி 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். மேலும் கணினி அறிவியலில் 3 பேரும், வணிகவியல், பொருளியலில் தலா ஒருவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா்களை பள்ளியின் தாளாளா் ஆா்.மருதாசலம், முதல்வா் ஆா்.விசாலாட்சி, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com