கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்.
கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்.

கோவை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கோவை சா்வதேச விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து கோவை சா்தேச விமான நிலையத்துக்கு வந்த சிங்கப்பூா் விமானப் பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பயணி ஒருவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா்.

தொடா்ந்து அவரின் உடமைகளை பரிசோதனை செய்ததில், அவருடைய பையில் தங்கக் கட்டிகள், தங்கச் சங்கிலி ஆகியவை இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து கோவை சா்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்தவரிடம் 1 கிலோ 220 கிராம் அளவிலான 10 தங்கக் கட்டிகள், தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 28 ஆயிரமாகும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com