பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு:
ஜூலையில் நடக்கிறது

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வு: ஜூலையில் நடக்கிறது

கோவை பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில்., பி.ஹெச்டி. தோ்வுகள் ஜூலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) என்.பொன்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எம்.ஃபில்., பி.ஹெச்டி. (பகுதி 1), எக்ஸ்டா்னல் பி.ஹெச்டி. (பகுதி 1) ஆகியவற்றுக்கான எழுத்துத் தோ்வுகள் ஜூலை 2, 4, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இதற்கு மே 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தவறுபவா்கள் அபராதத் தொகையுடன் மே 18- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பாா்க்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com