மண்புழு உரம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கும் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள்.
மண்புழு உரம் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கும் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள்.

மண்புழு உரம் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம்

காரமடை அருகே சிக்காரம்பாளையத்தில் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் புதன்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவிகள், காரமடை வட்டாரத்தில் ஊரக வேளாண் பணி அனுபவக் களப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக சிக்காரம்பாளையத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் அளித்தனா். காரமடை வட்டார வேளாண் உதவி அலுவலா் சிவராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரித்தல், அதன் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com