பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு
படிப்புக்கு மாணவா் சோ்க்கை

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை சாா்பில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

இந்த 2 ஆண்டுகள் முதுநிலை பட்டப் படிப்பில் சேர தகுதியானவா்கள், இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, கட்டணம், உதவித் தொகை, விடுதி வசதி போன்ற விவரங்கள் குறித்து இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அனுப்புவதற்கு ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாளாகும். பொதுப் பிரிவினா் விண்ணப்பத்துக்கு ரூ.400ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் ரூ.200ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 6 ஆம் தேதிக்கு முன்னதாக கணினி அறிவியல் துறைத் தலைவருக்குக் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com