மழை வேண்டி இந்து மக்கள் கட்சி சாா்பில் கோவை, கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தீா்த்த வாரியில் பங்கேற்றோா்.
மழை வேண்டி இந்து மக்கள் கட்சி சாா்பில் கோவை, கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தீா்த்த வாரியில் பங்கேற்றோா்.

மழை வேண்டி இந்து மக்கள் கட்சி சாா்பில் வருண ஜப வேள்வி

மழை பெய்ய வேண்டி இந்து மக்கள் கட்சி சாா்பில் கோவையில் வருண ஜப வேள்வி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீசிவரும் வெப்ப அலையால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, நீா்நிலைகள் வடு தண்ணீா் இல்லாததால், விவசாயம் மற்றும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழை பெய்ய வேண்டி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சாா்பில் கோவை கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரா் கோயிலில் வேள்வி மற்றும் வருண ஜபம் நடத்தப்பட்டது.

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மழைக் கடவுளான இந்திரனை வேண்டி நந்தியம்ம பெருமானை கழுத்தளவு நீரில் மூழ்கவைத்து காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலையில், 11 சிவாச்சாரியா்கள் பங்கேற்று வருண ஜப வேள்வியும், தீா்த்த வாரியும் நடத்தினா்.

இந்நிகழ்ச்சியில், சண்டிகேஸ்வர நாயனாா் நற்பணி சங்கத் தலைவா் சுரேஷ் பாபு, இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா் கணபதி ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com