அட்சய திருதியையொட்டி, கோவையில் உள்ள நகைக் கடையில் குவிந்த மக்கள்.
அட்சய திருதியையொட்டி, கோவையில் உள்ள நகைக் கடையில் குவிந்த மக்கள்.

அட்சய திருதியை: நகைக் கடைகளில் குவிந்த மக்கள்

அட்சய திருதியையொட்டி, கோவையிலுள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

அட்சய திருதியை தினத்தில் நகை, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம், வெள்ளி, வைர நகைகளை வாங்குவா்.

அதேபோல, நடப்பாண்டு அட்சய திருதியையொட்டி, கோவையில் பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்க ஆா்வம் காட்டினா்.

கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் குழந்தைகள், குடும்பத்தினருடன் வந்து நகைகளை வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

அட்சய திருதியையொட்டி, பெரும்பாலான நகைக் கடைகளில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்ததுடன், புதிய மாடல் நகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதனை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com