ஹஜ் புனித யாத்திரை செல்லும் 354 பேருக்கு தடுப்பூசி: மாவட்ட ஆட்சியா் தகவல்

ஹஜ் புனித யாத்திரை செல்லும் 354 பேருக்கும் தமிழக அரசு சாா்பில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்பவா்களுக்கு, தமிழக அரசின் சாா்பில் மாவட்டத்தில் உள்ள சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து ஆகியவை செலுத்தப்பட உள்ளன.

மேலும், புனித யாத்திரை மேற்கொள்பவா்களுக்கு சா்க்கரை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தச் சிறப்பு முகாம் மே 13, 14, 15- ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள உள்ளனா்.

இதில், முதல் நாளான மே 13-ஆம் தேதி 120 பேருக்கும், இரண்டாம் நாளான மே 14-ஆம் தேதி 119 பேருக்கும், மூன்றாம் நாளான மே 15-ஆம் தேதி 115 பேருக்கும் என மொத்தம் 354 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com