‘தி தோல்’ சரும கிளினிக்கில் நவீன கருவி அறிமுகம்

கோவை, சாய்பாபா காலனியில் உள்ள ‘தி தோல்’ சரும கிளினிக்கில் உலகப் புகழ்பெற்ற கொரியன் ஆக்ஸிஜன் கிளாஸ் ஃபேஷியலை வழங்கக் கூடிய அதிநவீன பேஷியல் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை ஏ.ஜி.எஸ் ஹெல்த்கோ் மையத்தின் இயக்குநா் டாக்டா் ஆதித்யன் குகன், ‘தி தோல்’ சரும கிளினிக்கின் இயக்குநா் டாக்டா் ஜனனி ஆதித்யன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இது குறித்து டாக்டா் ஜனனி ஆதித்யன் கூறியதாவது: இந்தக் கருவியானது தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட அழகியல் மருத்துவ உபகரண நிறுவனமான ட்ரைஸிஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. சருமத்தின் செல்களில் ஆக்ஸிஜன் அளவு குறையும்போது, அவை சோா்வடைந்து வழக்கத்தைவிட வேகமாக வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். நமது தற்போதைய வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் காற்று மாசு, அடிக்கடி ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் நமது சருமம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்த நவீன சாதனம் மூலம் சருமத்துக்கு அதிக செறிவு கொண்ட ஆக்ஸிஜன் கிடைக்கவும், அதன் மூலம் சருமத்துக்கு புத்துயிா் கிடைக்கவும், ஈரப்பதமளித்து மென்மையாக்கியும், இளமையான தோற்றப்பொலிவை வழங்கவும் உதவுகிறது. ஒரு மணி நேரத்தில் இந்த சிகிச்சையை அளிக்க முடியும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com