பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் முறியடிப்பா்: எம்எல்ஏ வானதி சீனிவாசன்

பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் முறியடிப்பா் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் இதுவரை நடந்துள்ள மூன்று கட்ட வாக்குப் பதிவில் 33 கோடி போ் வாக்களித்துள்ளனா். அடுத்த நான்கு கட்டங்களில் 258 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தொடக்கத்தில் வெளியான மக்களவைத் தோ்தல் கருத்து கணிப்புகளில் பாஜகவுக்கு மீண்டும் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றே வந்தன. ஆனால், இரண்டு கட்ட வாக்குப் பதிவு முடிந்ததும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது, வடமாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிா்பாா்த்த இடங்கள் வராது என்ற ஒரு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனா்.

நடுநிலையாளா்கள் போா்வையில் உலா வருபவா்கள் பாஜகவுக்கு எதிராக நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி வருகின்றனா். இந்தியா்களுக்கு என தனித்துவம் எதுவும் இல்லை எனவும், அவா்கள் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் போலவும் காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா பேசுகிறாா்.

இதையெல்லாம் பிரதமா் மோடி மக்களிடம் அம்பலப்படுத்தி வருவதைப், பொருக்க முடியாமல் பாஜகவுக்கு எதிரான பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் சிலா் ஈடுபட்டுள்ளனனா். பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் முறியடிப்பா். மக்கள் சக்திக்கு முன்பு எந்த பொய் பிரசாரமும் எடுபடாது.

எனவே, மக்களின் ஆதரவோடு எதிா் கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடித்து, பிரதமா் மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com