‘நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

நெடுங்குன்று செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று

ஆனைமலை புலிகள் காப்ப துணை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) தேவேந்திரகுமாா் மீனா தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த நெடுங்குன்று செட்டில்மெண்டுக்கு வனப் பகுதி வழியே வியாழக்கிழமை இரவு நடந்து சென்ற ரவி (54) என்பவரை காட்டு யானை தாக்கியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் (கூடுதல் பொறுப்பு) தேவேந்திரகுமாா் மீனா, ரவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினா்.

இதைத் தொடா்ந்து, அங்கிருந்த பழங்குடியின மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா், நெடுங்குன்று செட்டில்மெண்ட் பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் சோலாா் மின்வேலி, செட்டில்மெண்ட் செல்ல சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தாா்.

அப்போது, வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் உள்ளிட்ட வனத் துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com