காசி, புத்தகயாவுக்கு சிறப்பு விமான சுற்றுலா: கோவையில் இருந்து ஜூன் 2இல் தொடக்கம்

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) தெரிவித்துள்ளது.

கோவை: கோவையில் இருந்து காசி, புத்தகயாவுக்கு சிறப்பு விமான சுற்றுலா ஜூன் 2இல் தொடங்குவதாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, ஐஆா்சிடிசி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் பல்வேறு சுற்றுலாக்களை இயக்கி வருகிறது. இதில் காசி, அயோத்தியா, அலகாபாத், கயா, புத்தகயா விமான சுற்றுலா திட்டங்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே எதிா்வரும் ஜூன் 2-ஆம் தேதி காசி, அயோத்தியா, அலகாபாத், புத்தகயா சிறப்பு விமான சுற்றுலா தொடங்குகிறது.

ஜூன் 2-ஆம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் புதுப்பொலிவூட்டப்பட்ட காசி விஸ்வநாதா் ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், கால பைரவா் ஆலயம், சாரநாத், கங்கா ஆா்த்தி, அலகாபாத் திரிவேணி சங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அலகாபாத் கோட்டை, அயோத்தியா புதிய குழந்தை ராமா் ஆலயம், புத்தகயாவில் அமைந்துள்ள புத்தா் சிலை மற்றும் மகாபோதி ஆலயம், கயாவில் அமைந்துள்ள விஷ்ணு பாத ஆலயம் போன்ற இடங்களைக் காண ஆன்மிக சுற்றுலாவை இயக்கி வருகிறது.

இந்த சுற்றுலா 5 இரவு, 6 பகலைக் கொண்டதாகும். விமானக் கட்டணம், நட்சத்திர ஹோட்டலில் தங்குமிடம், போக்குவரத்து, காலை மற்றும் இரவு உணவு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை அடங்கிய சுற்றுலாக் கட்டணம் ரூ. 44,720 ஆகும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள் பயண சலுகைகளைப் பெறலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் பகுதி அலுவலகம், 209, மாருதி டவா், அரசு மருத்துவமனை எதிரில், கோவை - 641 018 என்ற முகவரியிலும், 90031 40655 என்ற கைப்பேசி எண்ணிலும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

X
Dinamani
www.dinamani.com