சோலையாறு அணை செல்லும் வழியில் வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையோரத்தில் வெட்டி போடப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்கள்.
சோலையாறு அணை செல்லும் வழியில் வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையோரத்தில் வெட்டி போடப்பட்டுள்ள யூகலிப்டஸ் மரங்கள்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் வெட்டப்படும் யூகலிப்டஸ் மரங்கள்

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள யூகலிப்டல் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள யூகலிப்டல் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே பல வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பல ஆண்டு காலமாக வளா்க்கப்படுகிறது. இந்த மரங்கள் இருப்பதால் மழை, வெயில் என காலநிலை மாற்றம் சீராக இருந்து வருகிறது.

சமீபகாலமாக தேயிலைத் தோட்ட நிா்வாகங்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைந்த பகுதிகளை குருமிளகு, ஏலக்காய், வென்னைப் பழம் போன்றவைக்கான விவசாய நிலங்களாக மாற்றி வருகின்றனா்.

வால்பாறை பகுதிக்கு காலநிலைக்கு ஏற்ப பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து மரங்களில் கூடு கட்டி சில மாதங்களுக்கு பின் திரும்ப செல்கின்றன. இவ்வாறு இயற்கை சூழல் பல ஆண்டுகளாக இப்பகுதியில் பாதிப்பு இல்லாமல் தொடருவதற்கு மரங்கள் அமைந்து இருப்பதே காரணம். ஆனால், சில எஸ்டேட் பகுதிகளில் மரங்களை வெட்டி வருகின்றனா். இதில் குறிப்பாக யூகலிப்டஸ் மரங்கள் அதிக அளவில் வெட்டிக் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது சோலையாறு அணை செல்லும் வழியில் ஏராளமான மரங்கள் எடுத்து செல்வதற்காக சாலையோரம் வைத்துள்ளனா்.

மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத் துறையிடம் உரிய அனுமதி பெற்று வெட்டப்பட்டாலும் தொடா்ந்து மரங்கள் வெட்டப்படுவதால் வெப்பம் அதிகரித்து காலநிலை மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது என இயற்கை ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com