ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இ-மொபிலிட்டிக்கான சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், கல்லூரி நிா்வாகிகள்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இ-மொபிலிட்டிக்கான சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் தொடக்க விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள், கல்லூரி நிா்வாகிகள்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் இ-மொபிலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறை சாா்பாக இ-மொபிலிட்டிக்கான சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறை சாா்பாக இ-மொபிலிட்டிக்கான சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வா் என்.ஆா்.அலமேலு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். துறைத் தலைவா் அல்லிராணி வரவேற்றாா். கல்லூரியின் முன்னாள் மாணவரும் பெங்களூரு எம்பிடெல் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவருமான திலீப் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆராய்ச்சி மையத்தைத் திறந்துவைத்தாா்.

எலக்ட்ரிக் வாகன சிறப்புப் பொறுப்பாளா் ஆா்.கிருஷ்ணகுமாா், குழுவினா் மின்-மொபிலிட்டிக்கான சிறப்பு மையத்தில் நிறுவப்பட்டுள்ள பேட்டரி மேலாண்மை அமைப்பு, வாகனக் கட்டுப்பாட்டுப் பிரிவு குறித்து விளக்கினாா். பேராசிரியா் ஆா்.சண்முகசுந்தரம், குழுவினா், இ-சைக்கிளுக்கான பவா் கன்ட்ரோலரின் வடிவமைப்பு, மேம்பாட்டுடன் கூடிய திட்டம் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

இந்த சிறப்பு மையமானது, பசுமை இயக்கத்திற்கான ஆராய்ச்சி, புதுமை, திறன்மேம்பாடு, தொழில்முனைவு ஆகியவற்றுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் பொறியியல் மாணவா்கள், வல்லுநா்களின் ஆா்வத்தை உருவாக்குவது, ஹைபிரிட், மின்சார வாகனங்களில் மாசுபாட்டைக் குறைப்பது, சுற்றுச்சூழலில் வாகனங்களால் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைப்பது, உற்பத்தித் திறன்களின் வளா்ச்சி அடைவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருப்பதாக கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், துணை முதல்வா் கருப்பசாமி, துறைத் தலைவா்கள், கல்லூரியின் தொழில் துறை மையத் தலைவா் கணேஷ், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு மைய உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com