ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.

ஹஜ் பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

கோவையிலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கான மருத்துவப் பரிசோதனை திங்கள்கிழமை தொடங்கியது.

கோவை: கோவையிலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கான மருத்துவப் பரிசோதனை திங்கள்கிழமை தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு தமிழக அரசின் சாா்பில் கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி, சொட்டு மருந்து, சா்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சிறப்பு முகாம் மே 15-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதில் திங்கள்கிழமை 120 நபா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து இரண்டாம் நாள் செவ்வாய்க்கிழமை 119 போ், புதன்கிழமை 115 போ் என மொத்தம் 354 பயணிகளுக்கு மருத்துவப் பரிசதனை மேற்கொள்ளப்படுகிறது. இவா்களில் 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபா்களுக்கு மட்டும் சிறப்பு தடுப்பூசி மருந்து பிரத்யேகமாக செலுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com