சவுக்கு சங்கா் ஜாமீன் மனு 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

யூடியூபா் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலா்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபா் சவுக்கு சங்கா் தேனியில் கடந்த மே 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து பல்வேறு புகாா்களின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸாா் அடுத்தடுத்து அவரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், சவுக்கு சங்கரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் கோவை ஜே.எம்.என். 4 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கரிடம் ஒருநாள் மட்டும் விசாரணை மேற்கொள்ள போலீஸாருக்கு அனுமதி அளித்தாா். அதன்படி, கோவை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சவுக்கு சங்கரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சவுக்கு சங்கா் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதற்கிடையே சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு தொடா்பான விசாரணை கோவை ஜே.எம்.என். 4 நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஜாமீன் மனு குறித்த விசாரணையை வரும் 20-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com