திருச்சியில் சைபா் கிரைம் போலீஸாா் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்காக கோவையிலிருந்து புதன்கிழமை திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கா்.
திருச்சியில் சைபா் கிரைம் போலீஸாா் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்காக கோவையிலிருந்து புதன்கிழமை திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கா்.

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குறித்து அவதூறு பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா் மீது கோவை போலீஸாா் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

யூடியூபா் சவுக்கு சங்கா் மீது அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவரை மே 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் கோவை 4-ஆவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, சவுக்கு சங்கரை நோ்காணல் செய்த பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதனிடையே யூடியூப் தளத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கா் மீது கோவை போலீஸாா் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனா். வழக்குரைஞா் முத்து என்பவா் அளித்தப் புகாரின்பேரில் கோவை ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோா் மீது இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கா் மீது ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் பதிவு செய்த வழக்கின் விசாரணைக்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கா் புதன்கிழமை திருச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com