ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்களுக்கு நாளை உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை, மே 16: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான உயா் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை ( மே 18) நடைபெறுகிறது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு’ என்ற நிகழ்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 கட்டங்களாக நடத்த தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்படி, 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு ‘கல்லூரிக் கனவு’ இரண்டாம் கட்ட நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை (மே 18) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள கல்லூரிப் படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் 12-ஆவது பயின்று தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com