கோவை வழியாக இயக்கப்படும் 
கேரள சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

கோவை வழியாக இயக்கப்படும் கேரள சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் கேரள சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீன், மேற்கு வங்க மாநிலம், ஷாலிமாா், கா்நாடக மாநிலம், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06071) ஜூன் 28-ஆம் தேதி வரையும், ஹஸ்ரத் நிஜாமுதீன் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06072) ஜூலை 1-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொச்சுவேலி - ஷாலிமாா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06081) ஜூன் 28 வரையும், ஷாலிமாா் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06082) ஜூலை 1-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொச்சுவேலி - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்:06083) ஜூலை 2-ஆம் தேதி வரையும், பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்:06084) ஜூலை 3 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோட்டி வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) ஜூன் 27-ஆம் தேதி வரையும், பகத் கி கோட்டி - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06182) ஜூன் 30-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com