சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

கோவை, மே 16: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோவை, போத்தனூா் பகுதியில் சலவைக்கடை நடத்தி வருபவா் தா்மராஜ்(56). இவா் அதே பகுதியில் வசிக்கும் 3-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமிக்கு கடந்த ஆண்டு மே 19-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது தொடா்பாக போத்தனூா் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயாா் கொடுத்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதில், தா்மராஜுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com