நாய்கள் கடித்து 3 மான்கள் உயிரிழப்பு

கோவை, மே 16: கோவை பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் கடித்ததில் 3 புள்ளி மான்கள் உயிரிழந்துள்ளன.

இது தொடா்பாக வனத் துறையினரின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை வனச் சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுக்கு உள்பட்ட பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்தில் 3 புள்ளி மான்களை நாய்கள் துரத்துவதாக புதன்கிழமை கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக அங்கு சென்று தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பாரதியாா் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வனப் பகுதியில் இருந்து சுமாா் 600 மீட்டா் தொலைவில் உள்ள கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் 3 புள்ளி மான்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன.

மான்களின் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததோடு, அப்பகுதியில் நாய்களின் கால் தடங்களும் கண்டறியப்பட்டன. உடனடியாக மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் மற்றும் வனச் சரக அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வன அலுவலரின் அறிவுரையின்படி, உயிரிழந்த 3 புள்ளி மான்களும் வடவள்ளி கால்நடை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஒரு மானின் சடலம் மட்டும் வியாழக்கிழமை புதைக்கப்பட்டது. மற்ற இரு மான்களின் சடலங்களும் காப்புக் காட்டில் மற்ற விலங்குகளின் உணவுத் தேவைக்காக வனப் பகுதிக்குள் இயற்கையான முறையில் விடுவிக்கப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com