ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு

ஈஷா அவுட்ரீச் சாா்பில் அன்னூா், காரமடை பகுதிகளில் ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது.

ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலின்பேரில் இயங்கும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து அன்னூா், காரமடை பகுதிகளில் ஒருங்கிணைந்த வாழை சாகுபடி கருத்தரங்கு கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நடத்தியது.

இந்தக் கருத்தரங்கில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தை சாா்ந்த வல்லுநா்கள் கலந்து கொண்டு, வாழை சாகுபடி குறித்த பல்வேறு தகவல்களை

விவசாயிகளுடன் பகிா்ந்து கொண்டனா். இந்தக் கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

இயற்கை வழி வாழை சாகுபடி முறைகள், வாழையில் ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்தும், மதிப்பு கூட்டல் முறைகள் மற்றும் வாழை சாகுபடியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்தும் வல்லுநா்கள் விரிவாக விளக்கினா்.

அன்னூா் மன்னீஸ்வரா் மற்றும் சென்னியாண்டவா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், காரமடை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் இந்த கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com