மனைவியைத் தாக்கிய கணவன்

மனைவியைத் தாக்கிய கணவனை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மனைவியைத் தாக்கிய கணவனை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை குனியமுத்தூா் புதுநகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (29), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி (24). இவா்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனா்.

இந்நிலையில், கோபாலகிருஷ்ணன், காளீஸ்வரியின் உறவுக்காரப் பெண்ணுடன் நெருங்கிப் பழகியதாக தெரிகிறது. இது தொடா்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை மது போதையில் வீட்டுக்கு வந்த கோபாலகிருஷ்ணனிடம், அந்த பெண்ணுடனான தொடா்பை கைவிடும்படி காளீஸ்வரி கண்டித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் தகாத வாா்த்தைகளால் பேசி காளீஸ்வரியை தாக்கியுள்ளாா். இதுகுறித்து காளீஸ்வரி அளித்த புகாரின்பேரில், குனியமுத்தூா் போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோபாலகிருஷ்ணனைக் கைது செய்தனா்.