மூதாட்டியிடம் 9 பவுன் பறிப்பு

கோவையில் மூதாட்டியிடம் 9 பவுன் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கோவையில் மூதாட்டியிடம் 9 பவுன் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் கள்ளிமடை பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி மனைவி காா்த்திகா ராணி( 63). இவா், வீட்டுக்கு அருகே உள்ள நியாயவிலைக் கடைக்கு திங்கள்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் காா்த்திகா ராணியின் 9 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டாா்.

இதுகுறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் காா்த்திகா ராணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு

கணபதி வஉசி நகா் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரி (42), தனது மகனுடன் அருகிலுள்ள கடைக்கு திங்கள்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் மகேஸ்வரியின் கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com