கோவை ரேஸ்கோா்ஸில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலை.
கோவை ரேஸ்கோா்ஸில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலை.

பொலிவுறு நகரத் திட்டம்: ரேஸ்கோா்ஸில் ஜல்லிக்கட்டு காளை சிலை

கோவை ரேஸ்கோா்ஸில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Published on

பொலிவுறு நகரத் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் கோவை ரேஸ்கோா்ஸில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குளக்கரைகள் புனரமைப்பு, பொழுதுபோக்கு அமசங்கள் ஏற்படுத்துதல், 24 மணி நேர குடிநீா்த் திட்டம், பன்னடுக்கு வாகன நிறுத்தம், மாதிரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரேஸ்கோா்ஸ் ரவுண்டானா பகுதியில் தனியாா் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரேஸ்கோா்ஸ் பகுதியில் குதிரைப் பந்தயத்தை நினைவுகூறும் வகையில், ஏற்கெனவே குதிரைச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்தக் குதிரை சிலை அமைந்துள்ள இடத்தின் மறுபகுதியில் மக்களைக் கவரும் வகையில் ஜல்லிக்கட்டு காளையின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபைபா், அலுமினியம், வெண்கலம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த சிலையின் எடை 1 டன். இச்சிலை விரைவில் திறக்கப்பட உள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com