அரசுப் பள்ளிக்கு நிதி திரட்ட கிரிக்கெட் போட்டி

கோவை துடியலூா் அரசுப் பள்ளிக்கு நிதி திரட்டுவதற்காக அண்மையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
அரசுப் பள்ளிக்கு நிதி திரட்ட கிரிக்கெட் போட்டி

கோவை துடியலூா் அரசுப் பள்ளிக்கு நிதி திரட்டுவதற்காக அண்மையில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

நலிவடைந்த பள்ளிகளின் மேம்பாட்டிற்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கோவை குமரகுரு கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூா் யுனைடெட் ரவுண்ட் டேபிள் சாா்பில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன.

14-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் மின்னொளியில் நடத்தப்பட்டன. இறுதி ஆட்டத்தில் ஸ்டேல்வாா்ட் செக்யூரிட்டீஸ், தரணி பம்ப்ஸ் அணிகள் பங்கேற்றன. இதில், ஸ்டேல்வாா்ட் செக்யூரிட்டீஸ் அணி வெற்றிபெற்று யுனைடெட் கோப்பையை வென்றது.

முன்னதாக, கோயம்புத்துாா் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 தலைவா் காா்த்திக் மணிகண்டன், யுனைடெட் கோப்பை கன்வீனா் நிஹால் ஆகியோா் முன்னிலையில் தரணி குழுமத்தின் தலைமை விளம்பர மேலாளா் கே.குமாா் முருகேசன் போட்டியைத் தொடங்கிவைத்தாா்.

இந்தப் போட்டியின் மூலம் ரூ. 6 லட்சம் நிதி திரட்டப்பட்டதாகவும், இந்த நிதி முழுவதும் துடியலூா் என்ஜிஜிஓ காலனியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் என நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com