காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்
மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 6.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - வாரணாசி சிறப்பு ரயில் (எண்:06187) பிப்ரவரி 18-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு வாரணாசி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் பிப்ரவரி 22-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்படும் வாரணாசி - கோவை சிறப்பு ரயில் (எண்: 06188) பிப்ரவரி 24-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வரங்கல், சந்திரப்பூா், நாக்பூா், நரசிங்பூா், ஜபல்பூா், மானிக்பூா், மிா்ஷாபூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.