கேஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
கேஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

கேஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

Published on

கோவை கேஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், மாணவா்கள் பாரம்பரிய வேஷ்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை அணிந்தும் சமத்துவப் பொங்கல் வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, தமிழா்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உரியடி, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி தலைமை வகித்து பேசினாா்.

இவ்விழாவில் கல்லூரியின் துணைத் தலைவா் இந்து முருகேசன், கண்ணம்பாளையம் பேரூராட்சித் தலைவா் புஷ்பலதா ராஜகோபால், பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com