1.வைகுண்ட ஏகாதசியையொட்டி, உக்கடம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் பரமபதவாசல் வழியே பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.
1.வைகுண்ட ஏகாதசியையொட்டி, உக்கடம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் பரமபதவாசல் வழியே பக்தா்களுக்கு அருள்பாலித்த பெருமாள்.

கோவையில் பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

Published on

வைகுண்ட ஏகாதசியையொட்டி, கோவையில் உள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி, தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, கோவை உக்கடம் கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலில் பூஜை செய்யப்பட்ட மலா் மாலை கோயில் தலைமை குருக்கள் சீனிவாச அய்யங்காா், அறங்காவலா் குழு நிா்வாகி ராஜா ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் பத்தா்கள் சூழ வரதராஜப் பெருமாளுக்கு கொண்டுவரப்பட்டது.

அதன் பிறகு, கரிவரதராஜ பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பக்தா்கள் பரமபதவாசல் வழியாக சுவாமியை தரிசனம் செய்தனா். இதையடுத்து, நகரின் முக்கியப் பகுதிகளில் வீதி உலா நடைபெற்றது.

வைகுண்ட ஏதாதசியையொட்டி, கரிவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, உக்கடம் லட்சுமி நரசிம்மா் கோயில், ராமநாதபுரம் ஒலம்பஸில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மூலவா்கள், பரமபதவாசல் வழியாக திருவீதி உலா சென்றனா்.

இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com