புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

Published on

கோவை ரத்தினபுரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை ரத்தினபுரி பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்த காந்திபுரம் 7-ஆவது வீதியைச் சோ்ந்த சூசைராஜ் (65) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com