இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
Published on

கோவையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இரண்டு இளைஞா்கள் உயிரிழந்தனா்.

கோவை சரவணம்பட்டி தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ரவி மகன் லோகேஷ் (17). இவா், தனது சகோதரருடன் சோ்ந்து பந்தல் அமைக்கும் தொழில் செய்துவந்தாா்.

இந்நிலையில், லோகேஷின் நண்பருக்கு பிறந்த நாள் என்பதால் அவரது சகோதரரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மற்றொரு நண்பரான சரவணம்பட்டி பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த பிரசன்னா (18) என்பவருடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளாா்.

இருவரும் சரவணம்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து விபத்து தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com