கங்கா நா்ஸிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ அன்னபூா்ணா கௌரிசங்கா் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீனிவாசன்.
கங்கா நா்ஸிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ அன்னபூா்ணா கௌரிசங்கா் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீனிவாசன்.

கங்கா நா்ஸிங் கல்லூரியில் மாணவா் மேம்பாட்டுத் திட்ட கருத்தரங்கு

Published on

கோவை வட்டமலைப்பாளையம் கங்கா நா்ஸிங் கல்லூரியில் மாணவா் மேம்பாட்டுத் திட்ட கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

தலைமைத்துவம், தகவல் தொடா்பு, சிக்கல் தீா்க்கும் திறன், சுய மேலாண்மை ஆகிய திறன்களை மாணவா்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 900-க்கும் மேற்பட்ட மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள், நிா்வாக உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கல்லூரி அறங்காவலா் ரமா ராஜசேகரன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினரை கல்லூரி முதல்வா் டாக்டா் எஸ்தா் ராகல் அறிமுகப்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், ஸ்ரீ அன்னபூா்ணா கௌரிசங்கா் குழுமத்தின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு உரையாற்றினாா்.

இதில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com