பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக வருகிற 16-ஆம் தேதி, பெங்களூரு- எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 12677) பெங்களூரு கன்டோண்மென்ட்- சேலம் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், எஸ்எம்விடி பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்தூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது காா்மெலரம், ஒசூா், தருமபுரி ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும்.

கோவை - பெங்களூரு கன்டோண்மென்ட் வந்தே பாரத் ரயில் (எண்: 20642) 16-ஆம் தேதி சேலம்- பெங்களூரு இடையே வழக்கமான பாதையில் இயக்கப்படாமல், திருப்பத்தூா், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது தருமபுரி, ஒசூா் ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும்.

பெங்களூரு கன்டோண்மென்ட்- கோவை வந்தே பாரத் ரயில் (எண்: 20641) 16-ஆம் தேதி பெங்களூா் கன்டோண்மென்ட்- சேலம் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, திருப்பத்தூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது ஒசூா், தருமபுரி ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும்.

கோவை - லோக்மான்யா திலக் விரைவு ரயில் (எண்: 11014) நவம்பா் 16-ஆம் தேதி சேலம்- பெங்களூரு கன்டோண்மென்ட் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல் திருப்பத்தூா், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். இதனால் இந்த ரயிலானது, தருமபுரி, ஒசூா் ரயில் நிலையங்களில் நிற்பது தவிா்க்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com