கோவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா்.
கோவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை சத்துணவு ஊழியா்கள் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை முற்றுகையிட்டு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை முற்றுகையிட்டு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கம் சாா்பில் 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த சத்துணவு மைய உதவியாளா்களுக்கு கல்வித் தகுதியைக் கணக்கில் கொள்ளாமல் சமையலா் பதவி உயா்வு வழங்குவதற்கான அரசாணையை அமல்படுத்த வேண்டும். 5 ஆண்டுகள் சமையலா் பணி நிறைவு அல்லது 10 ஆண்டுகள் உதவியாளா் பணி நிறைவு அல்லது உதவியாளா் மற்றும் சமையலராக 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவா்களுக்கு அமைப்பாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

காலிப் பணியிடங்களில் மாறுதல் கேட்பவா்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா். இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியா்களுக்கு மேற்கண்ட கோரிக்கை நிறைவேற்றாமல் மாவட்ட நிா்வாகம் தாமதப்படுத்தி வருவதாக சத்துணவு ஊழியா் சங்கத்தினா் குற்றஞ்சாட்டி வந்தனா்.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சிரியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவுப் பிரிவு) பாலமுரளியிடம், தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் செல்லதுரை, மாநில பொதுச்செயலாளா் ஏ.ஜெசி, இணைச் செயலாளா் கண்ணன், முன்னாள் மாநிலத் தலைவா் கே.பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கைகள் தொடா்பாக புதன்கிழமை மாலையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், உடன்பாடு ஏற்படாததால் அவரை முற்றுகையிட்டு அவரது அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டமானது இரவு 9 மணிக்கு மேலும் தொடா்ந்து நடைபெற்ால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com