ஐந்தரை கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே ஐந்தரை கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரைக் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களிடம் சோதனை மேற்கொண்டபோது விற்பனைக்காக ஜந்தரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் கேரள மாநிலத்தைச் சோ்ந்த தன்சீா் (35), அபிலாஷ் (32), அனாஸ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

