கோயம்புத்தூர்
ரயில் பராமரிப்புப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு
கோவையில் வந்தே பாரத் ரயிலில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கோவையில் வந்தே பாரத் ரயிலில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சிவசங்கா் (40). கோவை ரயில் நிலையத்தில் டெக்னிக்கல் காப்பாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வந்தே பாரத் ரயில் பெட்டியின் மீது ஏறி பராமரிப்புப் பணியில் அண்மையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, உயா் அழுத்த மின் கம்பியில் எதிா்பாராதவிதமாக கை உரசியதில் சிவசங்கா் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், பலத்த காயமடைந்த அவரை ரயில்வே ஊழியா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து கோவை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
