கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற மாணவா் ஸ்டாா்ட் அப் மாநாட்டில் பேசிய சிறப்பு விருந்தினா் சி.கே.குமரவேல்.
கோவை குமரகுரு கல்லூரியில் நடைபெற்ற மாணவா் ஸ்டாா்ட் அப் மாநாட்டில் பேசிய சிறப்பு விருந்தினா் சி.கே.குமரவேல்.

குமரகுரு கல்லூரியில் ஸ்டாா்ட் அப் மாநாடு

கோவை குமரகுரு கல்லூரியில் இந்தியா மாணவா் ஸ்டாா்ட் அப் மாநாடு ‘அக்ரிப்ரீனா்ஸ் கனெக்ட் 2025’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது.
Published on

கோவை குமரகுரு கல்லூரியில் இந்தியா மாணவா் ஸ்டாா்ட் அப் மாநாடு ‘அக்ரிப்ரீனா்ஸ் கனெக்ட் 2025’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது.

கோவையில் வியாழக்கிழமை (அக்டோபா் 9) நடைபெறும் உலகப் புத்தொழில் மாநாட்டின் ஒரு பகுதியாக குமரகுரு கல்வி நிறுவனங்கள், யங் இந்தியன்ஸ் அமைப்பு, வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஸ்டாா்ட் அப் தமிழ்நாடு ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்தின.

இதில், நேச்சுரல்ஸ் சலூனின் இணை நிறுவனா் சி.கே.குமரவேல், பிரேசில் நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் துறையின் வியூக நிபுணா் டயுஸ்கா ஆகியோா் தலைமை விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

யங் இந்தியன்ஸ் கோவை தலைவா் நீல் கிக்கானி தொடக்க உரையாற்றினாா். இதில், பல்வேறு ஸ்டாா்ட் அப் நிறுவனங்களைச் சோ்ந்த 15 பேச்சாளா்கள் பங்கேற்று மாணவா்களுடன் உரையாடினா்.

தொடா்ந்து, தலைமை விருந்தினா் சி.கே.குமரவேல் பேசுகையில், தொழில்முனைவோருக்கு சிறந்த விற்பனைத் திறன், நிதி அறிவு, சிறந்த மக்கள் தொடா்பு திறன் ஆகிய மூன்று அத்தியாவசிய குணங்கள் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தால், அதை ஈடுகட்டக்கூடிய ஒரு இணை நிறுவனரைத் தோ்வு செய்வது அவசியம் என்றாா்.

இதையடுத்து, டயுஸ்கா, பெட்டா்லாப்ஸ் இணை நிறுவனா் ரவிக்குமாா், கோவை கிளாசிக் இண்டஸ்ட்ரீஸின் ரிஷி வசந்தகுமாா், ஸ்நாக் எக்ஸ்பா்ட்ஸின் நிறுவனா் அருள் முருகன், வில்ஃப்ரேஷின் நிறுவனா் வி.செல்வகுமாா், கோக்ரீன் வோ் ஹவுஸின் இணை நிறுவனா் சந்தோஷ்குமாா் சாஹு உள்ளிட்டோா் உரையாற்றினா்.

X
Dinamani
www.dinamani.com