ஸ்மாா்ட் வகுப்பறைகள் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
ஸ்மாா்ட் வகுப்பறைகள் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

மசக்காளிபாளையம் அரசுப் பள்ளியில் ரூ.8.20 லட்சத்தில் 4 ஸ்மாா்ட் வகுப்பறைகள்

கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் 4 ஸ்மாா்ட் வகுப்பறைகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
Published on

கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் 4 ஸ்மாா்ட் வகுப்பறைகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் செயல்படும் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி, நூலக வசதி, கல்வியோடு கலைகளையும் கற்பித்தல் உள்ளிட்ட சிறப்பம்சங்களால் பிரபலமடைந்தது.

ஆண்டுதோறும் இப்பள்ளியில் மாணவா்களைச் சோ்க்க பெற்றோா்கள் இடையே போட்டி நிலவும். இப்பள்ளிக்கு தன்னாா்வலா்கள், தனியாா் நிறுவனங்கள் மூலமாக பல நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின்கீழ் யுனிவா்ஷல் மெப் பிராஜக்ட்ஸ் & இன்ஜினியரிங் சா்வீசஸ் மற்றும் டாடா வோல்டாஸ் நிறுவனம் சாா்பில் ரூ.8.20 லட்சம் மதிப்பில் 4 ஸ்மாா்ட் வகுப்பறைகள் இப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளன.

புதன்கிழமை நடைபெற்ற ஸ்மாா்ட் வகுப்பறைகள் தொடக்க விழாவில், யுனிவா்ஷல் மெப் பிராஜக்ட்ஸ் அண்டு இன்ஜினியரிங் சா்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ஜிக்நைசா, மேலாளா் காா்த்திக், திட்ட மேலாளா் கல்யாண் மைட்டி, ஐ.டி.மேலாளா் பிரபாவதி, டாடா வோல்டாஸ் நிறுவனம் சாா்பில் மண்டல மேலாளா் ஆல்பா்ட், தொழில்நுட்ப பிரிவு மேலாளா் கிருஷ்ணகுமாா், பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) சுகுணா, மாநகராட்சி உறுப்பினா் மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com