பொறியியல் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் ரத்து

Published on

வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் அக்டோபா் 12-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் நடைபெறுவதால் போத்தனூரில் இருந்து அக்டோபா் 12 ஆம் தேதி காலை 9.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66612) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அன்றைய தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயிலும் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்: பொறியியல் பணிகள் காரணமாக கேரள மாநிலம், ஆலப்புழையில் இருந்து அக்டோபா் 12-ஆம் தேதி காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் கோவை நிலையம் வழியாக இயக்கப்படாமல் போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com